முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தென்மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கிய டெங்கு காய்ச்சல்!

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையில் தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு தமிழகத்தில் பொதுவாக குறைந்துள்ள நிலையில் தென்மாவட்டங்களிலும் தொற்றுப் பாதிப்பு குறித்த ஒற்றை இலக்கங்களில் மட்டும் தற்போது பதிவாகி வருகிறது. இந்த நிலையில் பருவம் தவறி ஜனவரி மாதம் 17ஆம் தேதி வரை பெய்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு தென்மாவட்டங்களில் அதிகரித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குறிப்பாக தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஆங்காங்கே பதிவாகி வருவதால், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஆறு சிறுவர்கள் உட்பட ஏழு பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு என்று சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 30 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி தீவிர காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார். இதனையடுத்து சுகாதாரத்துறை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து கொசுப்புழு ஒழிப்பு பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறது. மேலும் பொதுமக்கள் தங்கள் சுற்றுப் பகுதிகளில் தூய்மையாக வைத்திருக்கும் அறிவுறுத்தி இருக்கிறது.

மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் தங்கள் பகுதிகளில் கொசுப்புழு இல்லை என்று உறுதி செய்து தன்னிலை சான்று அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா குறைந்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தென்மாவட்டங்களில் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வெளியானது நாகசைதன்யா நடித்துள்ள ‘கஸ்டடி’ படத்தின் டீசர்!

Web Editor

அதிமுக விவகாரம்; உயர்நீதிமன்றத்தில் சசிகலா வாதம்

EZHILARASAN D

ரஜினியுடன் இளையராஜா திடீர் சந்திப்பு

EZHILARASAN D

Leave a Reply