சென்னையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய 9,500 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சொத்து வரி, பால் மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்தும் திமுக அரசை கண்டித்தும், சென்னையில் நேற்று பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மொத்தம் 34 இடங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அதிமுக ஆதரவாளர்கள் என மொத்தம் 9,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனுமதியின்றி கூடுதல், அரசு உத்தரவை மீறி செயல்படுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







