இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார் …..? : டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு….!

டி 20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின்  முதல் அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. கொல்கத்தாவின் ஈடன் காடர்ன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய நியூசிலாந்து அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதனை தொடர்ந்து இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

தற்போது இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சை  தேர்வு செய்துள்ளார். இதனை தொடரந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்திய அணியில் மாற்றம் ஏது இல்லாத நிலையில் இங்கிலாந்து அணியில் ரெஹான் அகமதுவுக்கு பதிலாக ஜேமி ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி விவரம் 

இந்தியா : அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (WK), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (C), திலக் வர்மா, ஹார்டிக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

இங்கிலாந்து : பில் சால்ட், ஜோஸ் பட்லர் (WK), ஹாரி புரூக் (C), ஜேக்கப் பெத்தேல், டாம் பான்டன், சாம் கரன், வில் ஜாக்ஸ், லியாம் டாசன், ஜேமி ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.