மதுபான உரிம முறைகேடு வழக்கில் டெல்லி உட்பட 6 மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியது தொடர்பாக டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு மீது, பாஜக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இதில் முறைகேடு நடந்ததாக கூறி டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 31 இடங்களில் கடந்த 19ஆம் தேதி சிபிஐ சோதனை நடத்தியது. 
இந்நிலையில் மதுபான உரிம முறைகேடு தொடர்பாக சிபிஐ சோதனை நடத்திய நிலையில், அமலாகத்துறை இயக்குநரகமும் சோதனை தொடங்கியுள்ளது. அதன்படி, டெல்லி உட்பட 6 மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். டெல்லி, அரியானா மாநிலங்களில் உள்ள தொழிலதிபர்கள், தனியார் நிறுவன இயக்குநர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். மேலும், கர்நாடகா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
-மகேஸ்வரி







