புதிய தேசிய கூட்டுறவு கொள்கை ஆவணத்தை தயாரிப்பதற்கான தேசிய அளவிலான புதிய குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சகம் புதிய தேசிய கூட்டுறவு கொள்கை ஆவணத்தை தயாரிப்பதற்கான குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் இடம் பெற்றுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
.
காந்திகிராம் ஊரக நிறுவனத்தின் கூட்டுறவுத் துறையின் தலைவரான டாக்டர் பிச்சை, தமிழ்நாடு கோ-ஆப் டெக்ஸ் தலைவர், தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் செயலாளர் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளதாக மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தக் குழுவிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமை வகிக்கிறார். கூட்டுறவுத் துறையின் பொருளாதார வளர்ச்சி மாதிரியை உருவாக்கும் பணிகளில் இந்த குழு ஈடுபட உள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய கூட்டுறவு கொள்கை ஆவணங்களில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.எம் அகமதாபாத்தின் பேராசிரியர் சுக்பால் சிங், ரிசர்வ் வங்கியின் சென்ட்ரல் போர்டு இயக்குனர் சதீஷ், மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் இணைச்செயலாளர் உள்ளிட்ட 47 முக்கிய நபர்கள், புதிய தேசிய கூட்டுறவு கொள்ளை ஆவணம் தயாரிப்பதற்கான குழுவில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
– இரா.நம்பிராஜன்