தமிழ்நாடு, உ.பி.யில் பாதுகாப்புத்துறைக்கான தொழிற்பேட்டைகள்! திரௌபதி முர்மு!

தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தில்  பாதுகாப்புத்துறைக்கான தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது உரையில் தெரிவித்துள்ளார்.   மக்களவைக்கு தேர்தல் நடைபெற்று,  புதிய அரசு பதவியேற்ற நிலையில் நடைபெறும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டுக்…

தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தில்  பாதுகாப்புத்துறைக்கான தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது உரையில் தெரிவித்துள்ளார்.  

மக்களவைக்கு தேர்தல் நடைபெற்று,  புதிய அரசு பதவியேற்ற நிலையில் நடைபெறும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டுக் குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகள் ஏழ்மையில் இருந்து 25 கோடி மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.  அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் 55 கோடி மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.  ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் தொழில்துறை பயனடைந்துள்ளது.

தமிழ்நாடு,  உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்புத்துறைக்கான தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.  தேர்வு முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது.

வடகிழக்கு மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.  வடகிழக்கில் அமைதி நிலவ பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  மகளிருக்கான பல்வேறு சுயதொழில் திட்டங்கள் அதிகளவில் அமல்படுத்தப்பட்டுள்ளன.  அரசின் திட்டங்களால் நாட்டின் பெண்களுக்கான பொருளாதாரம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது உரையில் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.