முக்கியச் செய்திகள்சினிமா

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும்  ‘ராயன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் தனுஷின் 50-வது திரைப்படமாக உருவாகும் ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.  இந்த திரைப்படத்தை தனுஷே எழுதி,  இயக்கி,  நடித்து வருகிறார்.  இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன்,  சந்தீப் கிஷன்,  காளிதாஸ் ஜெயராம்,  எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த திரைப்படம் வடசென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த டிசம்பர் மாதம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.  இந்த திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்கள் : கென்யாவில் மக்கள் எதிா்ப்பு எதிரொலி! புதிய வரி விதிப்பு மசோதா வாபஸ்!

இந்த திரைப்படம் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  இந்த திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.  அந்த போஸ்டரில் தனுஷ்,  சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம்,  துஷாரா விஜயன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  மேலும், இந்த போஸ்டரை பகிர்ந்து,  ‘ராயனும் வருவான் தீயா’ என்று படக்குழு பதிவிட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

திமுக – அதிமுக அரசியல் களம்; இருதுருவ அரசியலில் அதிமுக தொடர்கிறதா?… பாஜக நுழைகிறதா?…

Web Editor

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Jeni

புதிய மாநிலங்கள் உருவாக்கப்படுகிறதா?-மத்திய அமைச்சர் பதில்

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading