அவதூறு வழக்கு – குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கு தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற…

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கு தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்துள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொரடப்பட்டது.

இதையும் படியுங்கள் : ஏப்.28, 29 ஆகிய தேதிகளில் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! – குடியரசு தலைவரை சந்திக்க திட்டம்

இந்த வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்து, 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டு, வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ராகுல்காந்தி மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.