சீனாவில் எரிவாயு குழாய் உடைப்பு: அதிகரிக்கும் உயிரிழப்பு

சீனாவின் ஷியான் நகரத்தில் நடைபெற்ற எரிவாயு குழாய் உடைப்பு விபத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. ஊபேய் மாகாணத்தில் உள்ள ஷியான் நகரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எரிவாயு குழாய் உடைப்பு விபத்து ஏற்பட்டது.…

சீனாவின் ஷியான் நகரத்தில் நடைபெற்ற எரிவாயு குழாய் உடைப்பு விபத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

ஊபேய் மாகாணத்தில் உள்ள ஷியான் நகரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எரிவாயு குழாய் உடைப்பு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமையில் 12 ஆக இருந்தது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி 25 ஆக உயர்ந்துள்ளது. ஊபேய் மாகாணத்தின் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரி இந்த விபத்து தொடர்பாகச் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது இந்த தகவலை அவர் தெரிவித்தார்.

சீன காவல்துறையின் அறிக்கைப்படி இந்த விபத்தில் 138 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தோரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சீனாவில் இதுபோன்ற விபத்துக்கள் பல முறை நடைபெற்றுள்ளது. 2015ம் ஆண்டில், டையன்ஜினில் நடைபெற்ற எரிவாயு குழாய் உடைப்பு விபத்தில் 173 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோல் 2013-ல் எண்ணெய் குழாய் விபத்தில் 60 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.