தமிழ் நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு….!

தமிழ் நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றார்.

மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். இதையடுத்து, அம்மாநிலத்தின் ஆளுநராக தமிழ் நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார்.  அதே போல், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக கேரள ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் நியமனம் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து மேற்கு வங்க ஆளுநராக  நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி நேற்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு கொல்கத்தா சென்றார். மேலும்  ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், நேற்றிரவு சென்னை வந்தார்.

இந்த நிலையில்  கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இன்று  நடைபெற்ற  நிகழ்ச்சியில் தமிழ் நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றார். அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.