ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் தரிசனம் செய்தார். விருதுநகர் மாவட்டத்தில் இன்று நடைபெறக்கூடிய இரு வேறு நிகழ்ச்சியில் பங்கு பெற நேற்று இரவு ராஜபாளையம் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது
மனைவியுடன் தரிசனம் செய்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் இன்று நடைபெறக்கூடிய இரு வேறு நிகழ்ச்சியில் பங்கு பெற நேற்று இரவு ராஜபாளையம் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு ராம்கோ ஓய்வு விடுதியில் தங்கினார். தொடர்ந்து இன்று காலை ஸ்ரீ ஆண்டாள் கோயிலுக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

இதையும் படிக்கவும் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்!

தொடர்ந்து கொடி மரத்தை தொட்டு வணங்கிவிட்டு கோயிலுக்கு சென்ற ஆளுநர் அங்கு  ஆண்டாள் மற்றும் ஸ்ரீ ரெங்க மன்னரை தரிசனம் செய்து பிரசாதங்களை பெற்றுக் கொண்டார்.ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் முடித்து வெளியே வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவிற்கு உணவு வழங்கினார். தொடர்ந்து அவருக்கு ஸ்ரீஆண்டாள் கோயில் நிர்வாகம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு வருகை தந்த ஆளுநரை மணவாள மாமுனிகள் ஜீயர் ஸ்ரீ ஸ்ரீசடகோபராமானுஜர் வரவேற்றார். ஆண்டாள் கோயிலில் தரிசனம் முடித்த ஆளுநர் ராஜபாளையம் புறப்பட்டு சென்றார். இன்று காலை ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் நடைபெற உள்ள பழைய மாணவர்கள் சந்திப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அதனையடுத்து பிற்பகலில் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி நடைபெற உள்ள விழாவில் பங்கேற்க உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.