பணி நேரத்திற்கு முன்னதாகவே வீடு திரும்பலாம்! – இஸ்லாமியர்களுக்கு அரசு அளித்த சலுகை

ரமலான் நோன்பு கால சலுகையாக, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி நேரத்திற்கு முன்னதாகவே வீடு திரும்ப அனுமதி அளித்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ரமலான் மாதம்…

ரமலான் நோன்பு கால சலுகையாக, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி நேரத்திற்கு முன்னதாகவே வீடு திரும்ப அனுமதி அளித்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

ரமலான் மாதம் தொடங்கியதால் இஸ்லாமியர்கள் உணவு, நீர் உட்கொள்ளாமல் உண்ணா நோன்பு கடைபிடித்து வருகின்றனர். காலை முதல் மாலை வரை இந்த நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாலையில் நோன்பு திறப்பதற்கு வசதியாக பணிகளில் இருந்து, சற்று முன்னதாக வீடு திரும்ப இஸ்லாமியர்கள் விரும்புகின்றனர்.

இதையும் படியுங்கள் : தன்னுடைய திருமணத்தில் தானே போட்டோ எடுத்த புகைப்படக் கலைஞர் – வீடியோ இணையத்தில் வைரல்!

இதனை கருத்தில் கொண்டு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் பணி நேரத்திற்கு முன்னதாகவே, பிற்பகல் 3.30 மணிக்கு வீடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 26 ஆம் தேதி, மேற்கு வங்க சிறுபான்மையினர் நலன் மற்றும் மதரஸா கல்வித் துறையின் பொறுப்பை ஏற்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மம்தா பானர்ஜியின் உத்தரவுக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.