ஸ்டார்ட் அப் ரேங்கில் முன்னணி இடம் பெற்ற டான்சிம் குழுவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (TANSIM) மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாநிலங்களின் ஸ்டார்ட்அப் ரேங்கிக் 2021-ல் முன்னணி இடம் பெற்றமைக்காக எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://twitter.com/mkstalin/status/1543891650878906368
அண்மைச் செய்தி: ‘முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியானது’
மாநிலத்தின் ஸ்டார்ட்அப் சாம்பியன் விருது வழங்கப்பட்டமைக்காக எஸ்.நாகராஜன் மற்றும் ஆர்.வி. சஜீவனா ஆகியோருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில் ஸ்டார்ட்அப் சூழலை மேம்படுத்துவதற்கு இந்த அரசு எடுத்து வரும் பல புதுமையான நடவடிக்கைகளினால், எதிர்வரும் ஆண்டுகளில் நமது மாநிலம் சிறந்த செயல்திறன் கொண்ட தரவரிசையில் மேலும் உயர முடியும் என நம்புகிறேன். டான்சிம் குழு வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என அவர் ட்விட்டரில் வாழ்த்திப் பதிவிட்டுள்ளார்.








