முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியானது

பிப்ரவரி மாதம் நடைபெற்ற முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை…

பிப்ரவரி மாதம் நடைபெற்ற முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

அண்மைச் செய்தி: ‘மீண்டும் அதிகரிக்கும் கொரோனோ தொற்று’

இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ள முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர்கள் நிலை-1 இல் இருக்கும் 2020-21 காலிப்பணியிடங்களுக்கான கணினி வழித்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை, 2,13,893 பேர் எழுதிழுதியிருந்தனர். இந்நிலையில், முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் trb.tn.nic.in இணையதளத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.