கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்!

கடலூர் மாவட்டம் காட்டுமண்ணார்கோவில் கொள்ளிடம் ஆற்றில் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளுக்காக நடைபெற்ற ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு தடுத்தி நிறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர்…

கடலூர் மாவட்டம் காட்டுமண்ணார்கோவில் கொள்ளிடம் ஆற்றில் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளுக்காக நடைபெற்ற ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு தடுத்தி நிறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமண்ணார்கோவிலை அடுத்த ம.புளியங்குடி கிராமம் வழியாக செல்லும் கொள்ளிடம் ஆற்றில் கடந்த 2001-02ம் நிதியாண்டில் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 4 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் நீர் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் அப்பகுதியை சேர்ந்த 118 கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. தற்போது இப்பகுதியில் புதியதாக மேலும் 6 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன.இதனையறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது,ஏற்கனவே காட்டுமண்ணார்கோவில், ம.புளியங்குடி, தில்லைநாயகபுரம், ஆழங்காத்தான், வாண்டையார் இருப்பு, அரசூர், வெள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் நிலத்திடி நீரின் தன்மை உப்பாக மாறிவிட்டது. இதனால் குடிப்பதற்கு இந்த நீர் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது. மேலும் விவசாயத்திற்கு இந்த நீர் முற்றிலும் ஏதுவாக இல்லை.

இந்நிலையில் மேலும் ஆறு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டால் இந்த நீரை உப்பின் தன்மை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.எனவே இப்பகுதியில் தடுப்பணை அமைத்து நீரின் தரத்தை அதிகரித்த பின்னரே ஆழ்துளை கிணறுகளை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.