முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 15 குழந்தைகளுக்கு கடலூர் மாநகர திமுக செயலாளர் கே.எஸ்.ராஜா, மாநகராட்சி மேயர் சுந்தரி தங்க மோதிரத்தை வழங்கினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்தும் கொண்டாடினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடலூர் மாவட்டத்திலும், மாநகர திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கொண்டப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கடலூர் மாநகர திமுக செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமையில், கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ்நாட்டின் இடைத்தேர்தல்கள்!
இந்நிகழ்வில் கலந்து கொண்ட கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்தார். தொடர்ந்து, அப்பகுதியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். திமுகவைச் சேர்ந்த பல கவுன்சிலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
– கோ. சிவசங்கரன்.