தொழிலதிபரும், நடிகருமான அருள் சரவணனின் ‘தி லெஜண்ட்’ திரைப்படம் நாளை (மார்ச் 3ம் தேதி) டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் முதலில் விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே அறிமுகமானார். அதன்பிறகு ‘தி லெஜண்ட்’ திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை ஜே.டி மற்றும் ஜெரி இயக்கியிருந்தனர். இந்த திரைப்படத்தில் கீதிகா திவாரி, ஊர்வசி ரவுடேலா, விவேக், சுமன், நாசர், பிரபு, விஜயகுமார், லதா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தப் படம் கிட்டத்தட்ட 600 திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. படம் வெளியாகி பல நாட்கள் ஆன போதும் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகமல் இருந்தது. இந்தச் சூழலில் இந்தப்படம் மார்ச் 3 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் சரவணன் வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளத்தில் இந்த படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என தெரிகிறது.