செய்திகள் சினிமா

தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அறிவித்த சுஷ்மிதா சென் – ரசிகர்கள் உருக்கம்

தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக நடிகை சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார். அதன் பிறகு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை எடுத்துக்கொண்டதையும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

நடிகை சுஷ்மிதா சென் தனது தந்தை சுபீர் சென்னுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: உங்கள் இதயத்தை மகிழ்ச்சியாகவும் பலமாகவும் வைத்திருங்கள். அது உங்களுக்கு மிகவும் தேவைப்படும் போது அது உங்களுடன் துணை நிற்கும். இது என் தந்தை சுபிர் சென் சொன்ன புத்திசாலித்தனமான வார்த்தைகள்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. ஸ்டெண்ட் போடப்பட்டது. மிக முக்கியமாக, எனக்கு பலமான இதயம் இருக்கிறது என்பதை எனது இருதயநோய் நிபுணர் மீண்டும் உறுதிப்படுத்தினார். நிறையபேருக்கு  தங்களின் சரியான நேரத்தில் உதவி மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அதை மற்றொரு பதிவில் செய்கிறேன். எனது நலம் விரும்பிகளுக்கு நன்றி. இவ்வாறு சுஷ்மிதா சென் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஊழலற்ற ஆட்சி அமைய சரியான தலைமை வேண்டும்: கமல்ஹாசன்

எல்.ரேணுகாதேவி

புதுச்சேரியில் ஊரடங்குக்கான அவசியமில்லை – தமிழிசை செளந்தரராஜன்

Gayathri Venkatesan

ஆர்யன் கானுக்கு ஆசையாக அம்மா அனுப்பிய டிபன்: திருப்பி அனுப்பிய சிறை அதிகாரிகள்

Halley Karthik