தண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்…: நியூஸ் 7 தமிழ் களஆய்வில் விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகள் என்ன?

பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் இன்று கள ஆய்வு மேற்கொண்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன என்பதை நேரடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும்…

பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் இன்று கள ஆய்வு மேற்கொண்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன என்பதை நேரடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த கனமழையால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து நியூஸ் 7 தமிழ் இன்று காலை முதல் கள ஆய்வு மேற்கொண்டது. அதில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள் என்ன என்பதை பார்ப்போம்.

பயிர் சேதம் : விவசாயிகள் கோரிக்கை

  • நெல் ஈரப்பத அளவை 22%ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டும்.
  • கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை துரிதப்படுத்த வேண்டும்.
  • நிவாரண பட்டியலில் சேர்க்கப்படாத பகுதிகளையும் சேர்க்க வேண்டும்.
  • குழு அமைத்து சேதம் குறித்து உரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
  • விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
  • பயிர்க் காப்பீடு தொகை உரிய அளவில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • வடிகால்களை முறையாக தூர்வாரி சீரமைக்க வேண்டும்.
  • ஊடு பயிர்களுக்கு நிவாரணமாக குறைந்தபட்சம் ரூ.8,000 வழங்க வேண்டும்.
  • அறுவடை இயந்திரங்களை தேவையான அளவிற்கு வழங்க வேண்டும் போன்ற முக்கியமான கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.
  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.