பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து அதிலிருந்து தயாரிக்கப்பட்ட ஓவர் கோட் ஆடையை அணிந்து இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.
கடந்த 31-ம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, இன்று மாநிலங்களைவில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்ற போது, வந்த பிரதமர் மோடி மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் இருந்து தயாரிக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்தார். நீல நிறத்தினாலான ஓவர் கோட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று அணிந்து வந்தார். மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆன பொருட்களின் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வுக்காக தயாரிக்கப்பட்ட இந்த ஆடை, கடந்த திங்கள்கிழமை இந்திய எரிசக்தி வாரத்தை முன்னிட்டு பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
இந்த உடையை அணிந்து இன்று நாடாளுமன்றம் வந்த பிரதமர் மோடி மாநிலங்களவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.