தமிழகத்தில் கடந்த ஆண்டை விட 15% குற்றங்கள் குறைந்துள்ளது- டிஜிபி சைலேந்திரபாபு

தமிழகத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் 15 சதவீதம் குற்றங்கள் குறைந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கோவை வந்த தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் சட்டம்- ஒழுங்கு…

தமிழகத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் 15 சதவீதம் குற்றங்கள் குறைந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கோவை வந்த தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் சட்டம்- ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் கோவை மாநகர காவல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த டிஜிபி,பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் சன்மானம் வழங்கி பாராட்டினார்.

இதனைத் தொடந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சைலேந்திரபாபு, கோவை மாநகரத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க 15 காவல் நிலையங்கள் உள்ள நிலையில், முதல்வர் உத்தரவின் படி கோவையில் சுந்தராபுரம், கவுண்டம் பாளையம், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளில் 3 புதிய காவல் நிலையங்கள் அமைப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கூடுதல் காவல் துறையினர் பணி அமர்த்தபடுவார்கள் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது. கடந்த வருடத்தில் அக்டோபர் மாதம் 1,597 கொலை குற்றங்கள் நிகழ்துள்ளது. இந்த ஆண்டு 1,368 கொலை குற்றங்கள் நடந்த நிலையில் 15% கொலை குற்றங்கள் குறைந்துள்ளது. அதேபோன்று ஆதாயக்கொலைகள் 89 லிருந்து 79க குறைந்துள்ளது. கொள்ளை வழக்குகள் 111 லிருந்து 96 ஆக குறைந்துள்ளது. இதில் பெரும்பாலான குற்றங்களை காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி கண்டறிந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அடிப்படையில் வேலூர், தஞ்சாவூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அதிக சிசிவிடி கேமிராக்கள் பொருத்தபட்டுள்ளன. காவல் துறையில் பெரியபெரிய குற்றங்களை கண்டறிய சிசிடிவி காமிராக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தமிழக எல்லைகளில் செக்போஸ்ட் அமைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்துபவர்களை கண்காணித்து கைது செய்வது வருவதாகவும், கேரளாவிலிருந்து வரும் பயோ மெடிக்கல் வேஸ்ட் தமிழகத்தில் கொட்டுவதை தடுக்க தென்காசி, பொள்ளாச்சி, கன்னியாகுமரி உள்பட 6 இடங்களில் செக் போஸ்ட் அமைத்து கண்காணித்து வருவதாகவும், வெளி மாநில வாகனங்களை கண்காணிக்க முதல்வரின் உத்தரவுப்படி சுங்கச்சாவடிகளில் நவீன கோமராக்கள் பொருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இன்றைக்கு இருக்கூடிய ட்ரெண்டிங் இணையவழி குற்றங்கள் தான். திருமண மோசடி, நெட்பேங்கிங் மோசடி ஆன்லைன் சூதாட்டில் ஆசைகாட்டி பணத்தை ஏமாற்றுவது உள்ளிட்டவை குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், டிஜிபி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.