தமிழ் நாடு முதலமைச்சர் விஜயை இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார். இந்த சந்திப்பு தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ பேசியதாவது:
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பல போராட்டங்கள் நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலைக்கு முழு ஆதரவையும் கொடுத்தது அதிமுக அரசு. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களே அதனை மூட வழக்கு தொடர்ந்தார். அனில் அகர்வால் அதனை கிரீன் காப்பர் என்ற பெயரில் திரும்ப கொண்டு வர முயற்சி செய்கிறார். அதற்கு அனுமதி வழங்க கூடாது என முதலமைச்சர் விஜயிடம் நான் கூறினேன்.
என்னுடைய நாடாளுமன்ற உரைகளை தொகுத்து டெல்லியில் வெளியிட உள்ளேன் அதில் முதலமைச்சர் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.
தவெக அரசு அமைந்ததில் இருந்து கமிஷன் கரப்ஷன் என்பதற்கு இடமில்லை. நல்லது நடந்தால் வரவேற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.




