கிரிக்கெட் வீரராகாமல் இருந்திருந்தால், டென்னிஸ் வீரராகியிருப்பேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஆடம்பர கேளிக்கை விடுதி ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னைக்கு மீண்டும் வருவது மகிழ்ச்சி
அளிப்பதாகவும் சென்னை எப்போதும் தனக்கு ஏராளமான அன்பையும் ஆதரவையும் அளித்திருப்பதாகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்தார். சென்னையில் கிடைக்கும் உணவு தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும், இங்கு தென் இந்திய உணவுகள் கிடைக்கும் எனவும் சென்னையுடனான தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
மேலும் கிரிக்கெட் வீரர்களிலேயே தனக்கு மிகவும் பிடித்தவர் தோனி தான் என்றும், தான் கிரிக்கெட் வீரராகாமல் இருந்திருந்தால், டென்னிஸ் வீரராகியிருப்பேன் என்றும் தெரிவித்தார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் ருதுராஜ் கெய்க்வாட், அண்மையில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் ஒரே ஓவரில் 7 சிக்சர் அடித்து உலக சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.