முக்கியச் செய்திகள் இந்தியா

குஜராத் மக்கள் பிரதமர் மோடி மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர்- மத்தியமைச்சர் ராஜ்நாத்சிங்

குஜராத் மக்கள் பிரதமர் மோடி மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர் என மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளை கொண்ட இமாசச்சல சட்டசபைக்கு கடந்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதேபோல் குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டச்சபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5ம் தேதி 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் குஜராத்தில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. குஜராத் முதலமைச்சர் வேட்பாளரான பூபேந்திர படேல் கட்லோடியா தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இதேபோல் இமாச்சலில் பாஜக முதலமைச்சர் வேட்பாளர் ஜெயராம் தாகூர் முன்னிலையில் உள்ளார். இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

குஜராத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 149 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஒரு தொகுதியில் வெற்றியடைந்துள்ளது. இதன் மூலம் பெரும்பான்மையை கடந்து பாஜக அரசு வெற்றி உறுதியாகியுள்ளது. 149 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் பாஜக தொடர்ந்து 7-வது முறையாக குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்க உள்ளது.

இந்நிலையில், குஜராத் தேர்தல் வெற்றி குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், குஜராத்தில் ஆளும் கட்சிக்கு மீண்டும் ஆட்சியமைக்கும் சூழல் நிலவுகிறது. பிரதமர் நரேந்திர மோடி மீது குஜராத் மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாகவே பாஜக தற்போது புதிய சாதனையை
குஜராத்தில் படைத்துள்ளது என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: 26ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Web Editor

தமிழகத்தில் கலவரங்கள்: காவல் துறை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் – ஈஸ்வரன்

Web Editor

62 வயதில் தன்னால் 3 கிலோ மீட்டர் ஓட முடிகிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Dinesh A