காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா உடல் தகனம் – இறுதி ஊர்வலத்தில் தலைவர்கள் பங்கேற்பு

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் தகனம் செய்யப்பட்டது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மாரடைப்பால் நேற்று காலமானதையடுத்து, அவரது உடல், ஈரோட்டில் உள்ள இல்லத்தில்…

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் தகனம் செய்யப்பட்டது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மாரடைப்பால் நேற்று காலமானதையடுத்து, அவரது உடல், ஈரோட்டில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவனின் கைகளை பிடித்து ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ், முத்துசாமி, செந்தில் பாலாஜி ஆகியோரும் திருமகன் ஈவேராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற திருமகன் ஈ.வெ.ரா.வின் இறுதி ஊர்வலத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கே.வி.தங்கபாலு, அமைச்சர் முத்துசாமி, ஜோதிமணி எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருங்கல்பாளையம் காவேரி கரை மின் மயானத்திற்கு, ஆர்கேவி சாலை, கருங்கல்பாளையம் வழியாக அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழிநெடுகிலும் காத்திருந்த பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கருங்கல்பாளையத்தில் உள்ள மின் மயானத்தில் திருமகன் ஈவெரா உடல் தகனம் செய்யப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.