தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
பெரம்பூரில் வேட்புமனுத்தாக்கல் செய்த விஜய் கையோடு தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். பெரம்பூரை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூரில் பிரச்சாரம் மேர்கொண்டார். ஆனால் கொளத்தூரில் விஜய் பிரசாரத்திற்கு போதிய காவல்துறை பாதுகாப்பு இல்லை என தேர்தல் அதிகாரியிடம் தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் புகார் மனு அளித்தார்.
கொளத்தூரையடுத்து தவெக தலைவர் விஜய் வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விஜயின் வில்லிவாக்கம் தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்ந்து தவெக பொதுச்செயலாளர் என், ஆன்ந்த் வெளியிட்டுள்ள பதிவில்,
”இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களது தமிழகம் முழுவதற்குமான முதற்கட்ட பிரசாரமாக சென்னை பெரம்பூரில் துவங்கப்பட்ட நிலையில், அங்கே நடந்த வேட்புமனுத் தாக்கல் மற்றும் பிரசாரத்திற்குச் செயல்படுத்தப்பட்டதுபோல, தன்னிச்சையாக இந்த பிரச்சாரங்களுக்குக் கலந்துகொள்ள வரும் பொதுமக்களுக்கும் அந்த இடங்களுக்குச் செல்லும் வழிகளில் தன்னிச்சையாகத் திரளும் பொதுமக்களுக்கும் சரியானப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைப்படுத்துதல், முன்னெச்சரிகை நடவடிக்கைகளைக் கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் மட்டுமல்லாமல், அங்கே செல்வதற்கான வழிகளிலும் சென்னைப் பெருநகர காவல்துறை செயல்படுத்தாததால் தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தை ரத்து செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்”
என்று கூறப்பட்டுள்ளது.







