நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்….!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி  234 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் காண்கிறது. மேலும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  காரைக்குடியில் போட்டியிடுகிறார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.