நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்று பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கும் விஜயின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.
சொத்து விவரம்
தவெக தலைவர் விஜய்க்கு ₹404 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ₹220.15 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளது. மேலும் பூர்வீகச் சொத்து மதிப்பு ₹21.83 கோடி என்றும் மனைவி பெயரில் ரூ.15 கோடி மதிப்பில் அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும் என்று வேட்புமனுவில் விஜய் தெரிவித்துள்ளார்.
ரொக்கம்
விஜய்யின் வங்கி கணக்கில் ரூ.220 கோடி உள்ளதாகவும், அவரது மனைவி சங்கீதாவின் வங்கி கணக்கில் ரூ.10.43 கோடி உள்ளதாகவும், விஜய்யின் மகன், மகள் வங்கி கணக்கில் ரூ.4 லட்சம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விஜய்யின் கையில் ரூ.2 லட்சம் ரொக்கம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்கம்
விஜய் தனது வசம் ரூ.1.20 கோடி மதிப்பில் 883 கிராம் தங்கம் இருப்பதாகவும், மனைவி வசம் ரூ.4.07 கோடியில் 3,132 கிராம் தங்கம், ரூ.1 கோடி மதிப்பில் 134.91 காரட் வைரம் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் விவரம்
தவெக தலைவர் விஜய்க்கு கடன் இல்லை என்றும் அதே சமயம் பல்வேறு தனி நபர்கள், நிறுவனங்களுக்கு விஜய் சுமார் ரூ.76 கோடி கடன் வழங்கியுள்ளார் என்றும் அவரது வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விவரங்கள் :
தவெக தலைவர் விஜயின் அவரது வேட்புமனுவில் தன் பெயரில் குற்றவியல் வழக்குகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும், லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி. படிப்பை முடிக்காமல் விஜய் இடையில் நின்றுவிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது







