திருமலையில் அண்ணாமலை சாமி தரிசனம்…

திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடைபாதை வழியாக நடந்து சென்று தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இருந்து சாமி தரிசனத்திற்காக திருப்பதிக்கு சென்றார்.…

திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடைபாதை வழியாக நடந்து சென்று தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இருந்து சாமி தரிசனத்திற்காக திருப்பதிக்கு சென்றார். அங்கு அலிப்பிரியில் இருந்து பாதையாத்திரையாக திருமலைக்கு தன்னந்தனியாக மலைப்பாதை வழியாக நடந்து சென்றார். திருமலைக்கு சென்ற அவர் விஐபி தரிசனம் மூலமாக ஏழுமலையானை வழிபட்டார். பின்னர் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்ட பிரசாதங்கள் மற்றும் தீர்த்தங்களை பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து கோவிலை விட்டு வெளியே வந்த அண்ணாமலையை சூழ்ந்துகொண்ட தமிழக மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் அவருடன் சேர்ந்து செல்பி எடுத்துக்கொண்டனர்.

இதன்பின்னர் செய்தியர்களிடம் பேசிய கே அண்ணாமலை, தமிழக மக்கள் அனைவரும் சிறப்பாக வாழ அருள் புரிய வேண்டி கொண்டதாக தெரிவித்தார். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்களவை உறுப்பினர்களை டெல்லிக்கு அனுப்பி வைக்கும் என்றும் அண்ணாமலை கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.