வாழைப்பழம் தர மறுத்த இளைஞரை முட்டித் தூக்கிய பசுமாடு – வைரல் வீடியோ

வாழைப்பழம் தர மறுத்த இளைஞரை பசுமாடு ஒன்று முட்டித் தூக்கி வீசும் வீடியோ வைரலாகி வருகிறது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகரில் இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வாழைத் தாரை ஏற்றிக்…

வாழைப்பழம் தர மறுத்த இளைஞரை பசுமாடு ஒன்று முட்டித் தூக்கி வீசும் வீடியோ வைரலாகி வருகிறது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகரில் இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வாழைத் தாரை ஏற்றிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்த பசுமாடு ஒன்று, அவரிடம் இருந்து வாழை பழங்களை பறிக்க முயன்றது. அதனை இளைஞர் தடுத்தால் பசுமாடு அவரை முட்டித் தூக்கி வீசியது. சிசிடிவி கேமராவில் பதிவான இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதேபோல முத்துப்பேட்டை குடியிருப்பு பகுதியில் சிறுவனை, இரண்டு நாய்கள் ஓட ஓட துரத்திச் செல்லும் சிசிடிவி காட்சியும் வைரலாகி வருகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.