சர்வதேச படகு போட்டி; ஹைட்ரஜன் மூலம் இயங்கும் படகை உருவாக்கி கோவை மாணவர்கள் அசத்தல்!

ஐரோப்பா கண்டத்தில் சர்வதேச எரிசக்தி படகு போட்டியில் பங்கேற்க உள்ள கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் இந்தியாவிலேயே முதல்முறையாக ஹைட்ரஜன் மூலம் இயங்கும் படகை உருவாக்கி அசத்தியுள்ளனர். உலகம் முழுவதும் அதிகப்படியான ஏற்றுமதி, இறக்குமதி…

ஐரோப்பா கண்டத்தில் சர்வதேச எரிசக்தி படகு போட்டியில் பங்கேற்க உள்ள கோவை
தனியார் கல்லூரி மாணவர்கள் இந்தியாவிலேயே முதல்முறையாக ஹைட்ரஜன் மூலம் இயங்கும் படகை உருவாக்கி அசத்தியுள்ளனர்.

உலகம் முழுவதும் அதிகப்படியான ஏற்றுமதி, இறக்குமதி போன்ற வர்த்தகம் என்பது
கப்பலில் நடந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் போன்ற எரிசக்தி ஆகிவற்றால் கப்பல் இயங்குவதால் கடல் வளத்தில் அதிகமாக பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பை தடுக்கும் பொருட்டு உலகம் முழுவதும் இருக்கும் பொறியியல் கல்லூரி மாணவர்களை வழக்கமான எரிசக்தியை பயன்படுத்தாமல் பேட்டரி சோலார் போன்ற மாற்று எரிசக்தி மூலம் இயங்கும் படகுகளை உருவாக்க மொனாக்கோ நாட்டு அரசு ஊக்குவித்து ஆண்டுதோறும் சர்வதேச படகு போட்டி நடத்தி வருகிறது.

அதே போல இந்த ஆண்டு வரும் ஜூலை மாதம் 3ம் தேதியிலிருந்து 8ம் தேதி வரை படகு போட்டிகள் நடைபெறுகிறது. மொனாக்கோ நாட்டு அரசின் பல்வேறு விதிமுறைகள் அடிப்படையில், இந்தியா சார்பில் பங்கேற்க கோவையில் உள்ள குமரகுரு கல்லூரியை சேர்ந்த 10 மாணவர்களுக்கு போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.இதற்காக கல்லூரி மாணவர்கள் டீம் ஸிசக்தி என்ற பெயரில் யாழி 2.0 எனும் 280கிலோ எடை கொண்ட படகினை கரிம நார் மூலம் உருவாக்கி, முற்றிலும் சோலார், பேட்டரி, ஹைட்ரஜன் எரிசக்தி மூலம் இயங்கக் கூடிய வகையில் படகை பொறியியல் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு பேட்டரி, சோலார் மூலம் படகை உருவாக்கி இந்தியா சார்பில் முதல் முறையாக பங்கேற்ற இவர்கள் இந்த ஆண்டு இந்தியா அணி சார்பில் பேட்டரி, சோலார் சக்தியுடன், ஹைட்ரஜன் பியூல் என மூன்றில் இயங்க கூடிய படகை உருவாக்கியதன் காரணமாக இரண்டாவது முறையாகவும் போட்டியில் பங்கேற்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்த படகிற்கான பொருட்களை பெரும்பாலும் கோவையிலிருந்தே பெற்று கல்லூரி வளாகத்திலேயே வடிவமைத்துள்ள மாணவர்கள், இதற்காக 18 லட்சம் ரூபாய்
செலவானதாகவும், இந்திய அரசின் புதிய தொழில் முனைவோர் திட்டம் மற்றும்
விளைத்துறையின் உதவியை நாடி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.