முக்கியச் செய்திகள் கொரோனா

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருந்த பச்சிளம் குழந்தை ஒன்று கடந்த 13ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தை மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டது. மருத்துவர்களும் செவிலியர்களும் குழந்தைக்கு தொடர்ந்து சிகிசையளித்து வந்தனர். ஆனாலும் குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி குழந்தை இன்று பரிதாபமாக உயிரிழந்தது. மதுரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்த முதல் குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே கொரோனா மூன்றாவது அலை உருவானால் அது குழந்தைகளையே அதிகம் பாதிக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் மதுரையில் குழந்தை ஒன்று கொரோனாவால் உயிரிழந்திருப்பது, மருத்துவர்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 4,512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6013 பேர் குணமடைந்துள்ளனர், 118 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!

Ezhilarasan

தாய், ஒன்றரை வயது குழந்தை மர்மமான முறையில் இறப்பு!

Saravana Kumar

கனடாவில் விக்டோரிய மகாராணியின் சிலை தகர்ப்பு

Halley karthi