முக்கியச் செய்திகள் தமிழகம்

“நெசவாளர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அரசாக திமுக இருக்கும்” – அமைச்சர் ஆர்.காந்தி

தமிழ்நாடு அரசு நெசவாளர்களுக்கும், நெசவுத் தொழிலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அரசாக இருக்குமென கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுடான கலந்துரையாடல் கூட்டம் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு நெசவாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்ட அமைச்சர் காந்தி 50க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் காந்தி நெசவாளர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை குறைப்பு!

Ezhilarasan

சசிகலா குணம் அடைய தொண்டர்கள் பிரார்த்தனை!

Niruban Chakkaaravarthi

லகிம்பூர் வன்முறை: ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைப்பு

Halley karthi