முக்கியச் செய்திகள் இந்தியா

அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் அனுப்பிய இந்தியா

இந்தியா அனுப்பிய கொரோனா தடுப்பூசிகள் அண்டை நாடுகளுக்கு சென்று சேர்ந்துள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவாக்ஸின் ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. முறையான சோதனைகள் நடத்தி முடிக்கப்படாததால் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இருந்தாலும் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 16ஆம் தேதி துவங்கின.

கொரோனா தடுப்பூசிகளை அண்டை நாடுகளுக்கும் வழங்க மத்திய அரசு முன்வந்தது. உலக அரங்கில் இந்தியாவின் நீண்ட கால நட்பு நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில் பெருமிதம் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் இன்று மியான்மர், பூடான் மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சேர்ந்தது. தொடர்ந்து, 1,00,000 அஸ்ட்ராஜென்கா கொரோனா தடுப்பூசிகள் மாலத்தீவில் இன்று தரையிறங்கியது.

இதுபோல இந்தியா அனுப்பும் 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் நாளை வந்து சேரும் என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் ஹிருதயேஷ் திரிபாதி தெரிவித்துள்ளார்.மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சாலிக், மிகப்பெரிய பரிசாக கொரோனா தடுப்பூசிகளை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு எங்களது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டார்.

Advertisement:

Related posts

வெற்றி கொண்டாட்டங்களைவிடத் தொண்டர்கள் உயிரைக் காப்பதே தலையாய கடமை: மு.க ஸ்டாலின்

Karthick

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு!

Karthick

கூண்டோடு பாஜகவில் இணைந்த திரிணாமூல் எம்.எல்.ஏக்கள்!

Karthick

Leave a Reply