பள்ளிகள் திறந்த முதல்நாளே 92% மாணவர்கள் வருகை: செங்கோட்டையன்!

பள்ளிகள் திறந்த முதல்நாளே அரசு மற்றும் தனியார் மள்ளியில் 92 சதவீதம் மாணவர்கள் வருகை தந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட…

பள்ளிகள் திறந்த முதல்நாளே அரசு மற்றும் தனியார் மள்ளியில் 92 சதவீதம் மாணவர்கள் வருகை தந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 10 ஆம் வகுப்பு, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் பள்ளிகள் நடைபெறும் என்றார்.

சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், இறுதித் தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டார். பள்ளி நேரம் முடிவடைந்த பின்னர் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். பிற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனைக்குப் பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் செங்கோட்டையன் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply