கிராமங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன: பிரதமர்

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை 2 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பிரதமரின் கிராம வீட்டு வசதி (அவாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ், உத்தர பிரதேசத்தைச்…

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை 2 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.


பிரதமரின் கிராம வீட்டு வசதி (அவாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 6 லட்சம் பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டு நிதி வழங்கினார். 6 லட்சம் பயனாளர்களுக்கான ரூ. 2,691 கோடி நிதியை அவர் விடுவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மோடி, பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் வேகமாக முன்னேறி வருகிறது என்றும் உத்தரப் பிரதேசத்தில் மிகவும் ஏழ்மையானவர்களுக்கு இது உதவியுள்ளது எனவும் கூறினார். ஒருவரின் சொந்த வீடு என்பது அவரின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதாகத் தெரிவித்ததோடு, வாழ்க்கையில் உறுதியையும், ஏழ்மையில் இருந்து விடுபடும் நம்பிக்கையையும் அது கொண்டு வருகிறது எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய பிரதமர், 75வது சுதந்திர தினத்துக்கு முன் ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் வீடு வழங்க பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் தொடங்கப்பட்டதாகவும், சமீப காலங்களில் கிராமப் பகுதிகளில் 2 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார். பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 1.25 கோடி வீடுகள், மத்திய அரசின் ரூ.1.5 லட்சம் கோடி பங்களிப்புடன் கட்டப்படுகின்றன என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply