நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 19 லட்சத்து 24 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில், மூன்று லட்சத்து 17 ஆயிரத்து 532 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி, ஒரே நாளில், 491 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 761 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 990 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் 9 ஆயிரத்து 287 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 5,100 ஆக இருக்கிறது.








