முக்கியச் செய்திகள் தமிழகம்

வட இந்திய லாரி மோதியதில் உடைந்த “பெரியார்” சிலை: விழுப்புரத்தில் பரபரப்பு!

விழுப்புரத்தில் பெரியார் சிலை மீது கனரக வாகனம் மோதியதில் சிலை சேதமடைந்துள்ளது.

விழுப்புரம் காமராஜ் தெருவில், 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரியார் சிலை உள்ளது. அந்த சாலை வழியாக வந்த வட இந்திய லாரி உரசியதில் பெரியார் சிலை அடியோடு பெயர்ந்து விழுந்து உடைந்துள்ளது. இதனை அறிந்த அப்பகுதி தி.மு.க, தி.க-வை சேர்ந்தவர்கள் காமராஜர் சாலையில், அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா சம்பவ இடத்தில் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதனம் செய்து அனுப்பி வைத்தார். மேலும், அப்பகுயில் எந்த அசம்பவிதம் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருகில் பொருத்தப்படிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, போலீசார் விசாரணை மேற்கொண்டதில், லாரி உரசியதில் பெரியார் சிலை அடியோடு பெயர்ந்து விழுந்து உடைந்தது தெரிவந்துள்ளது. தொடர்ந்து லாரி டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது”

Janani

தமிழ்நாட்டில் புதிதாக 1,551 பேருக்கு கொரோனா

Gayathri Venkatesan

அதிமுக தலைமை அலுவலகத்தை சீரமைக்கும் பணி தீவிரம்: விரைவில் பொறுப்பேற்கவுள்ளார் இபிஎஸ்

Web Editor