தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கடலூர் மாவட்டம் மாளிகம்பட்டு கிராமத்தில் நட்டநடு சாலையில் வைத்து 70 வயதான விவசாயி ஒருவரை மர்ம கும்பல் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்னும் வார்த்தை இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறதா? அல்லது ஒட்டுமொத்தமாக சமாதி கட்டப்பட்டுவிட்டதா? தலைநகரிலும் பாதுகாப்பில்லை! கிராமத்திலும் பாதுகாப்பில்லை! பச்சிளம் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை! வயதான முதியவருக்கும் பாதுகாப்பில்லை! வீட்டிலும் பாதுகாப்பில்லை! சாலையிலும் பாதுகாப்பில்லை!
இத்தகைய கொடூர ஆட்சியை மீண்டுமொரு முறை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்து, மீண்டும் ஒரு நரக வேதனையை மக்கள் அனுபவிக்கத் தயாராக இல்லை! திமுகவை வெளியேற்றி, தமிழகத்தை மீட்கும் தினம் தொலைவில் இல்லை”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







