முக்கியச் செய்திகள் இந்தியா வணிகம்

கொரோனாவால் இந்திய விமான நிறுவனங்களுக்கு ரூ.19,564 கோடி நஷ்டம்

கொரோனா காரணமாக, கடந்த நிதியாண்டில் விமான நிறுவனங்களுக்கு ரூ.19,564 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடமாக பல்வேறு நாடுகள் பெரும் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றன. சமீபகாலமாக அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் இந்திய விமான நிறுவங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதுபற்றி, மாநிலங்கள வையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் இந்திய விமானப் போக்குவரத்துத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. விமான நிறுவனங்களுக்குச் சுமாா் ரூ.19,564 கோடியும் இந்திய விமான நிலையங்களுக்கு ரூ.5,116 கோடியும் இழப்பும் ஏற்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக 2019-20 ஆம் ஆண்டில் உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 0.3 சதவிகிதமும் 2021 ஆண்டில் 61.7 சதவிகிதமும் குறைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இந்த வருட செம்டம்பர் மாத நிலவரப்படி, ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள், முறையே ரூ.2,350 கோடியும் ரூ.185 கோடியும் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு செலுத்த வேண்டி இருப்பதாகவும் அமைச்சர் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

உச்ச நீதிமன்ற புதிய நீதிபதிகள் பதவியேற்பு

Saravana Kumar

காதல் நாயகன் ஹரிஷ் கல்யாணுக்கு இன்று பிறந்தநாள்!

Vandhana

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று!

Halley Karthik