முக்கியச் செய்திகள் தமிழகம்

விவசாய தோட்டத்திற்குள் புகுந்த கரடி தாக்கியதில் இரண்டு விவசாயிகள் படுகாயம்

ஆண்டிபட்டி அருகே மலை அடிவாரத்திலுள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்த கரடி தாக்கியதில் இரண்டு விவசாயிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி மலையடிவாரத்திலுள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மலைப்பகுதியிலிருந்து தோட்டத்திற்குள் புகுந்த கரடி விவசாயி பொம்மையனை தாக்கியது. உடனடியாக பொம்மையன் சத்தமிடவே அங்கிருந்து ஓடிய கரடி அருகே இருந்த தோட்டத்திற்குள் புகுந்து விவசாயி மணியையும் தாக்கிவிட்டு மலைப்பகுதிக்குள் ஓடியது.

இதையடுத்து படுகாயமடைந்த பொம்மையன், மணி ஆகிய இருவரும் தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தோட்டத்திற்குள் புகுந்து விவசாயிகளை கரடி தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலையடிவாரத்தில், உள்ள விவசாய நிலங்களில், கரடி போன்ற விலங்குகள் புகுந்து அங்கு பயிரிடப்படுள்ள பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதனால், அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

10 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 9 பேர் கைது!

Jeba Arul Robinson

நீலகிரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடும் ராதிகா: பிரதமர் மோடி பாராட்டு

Vandhana

அரவக்குறிச்சி வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று!

Jeba Arul Robinson