கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு பாரத ரத்னா: கெஜ்ரிவால்

கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு இந்தாண்டு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். கொரோனா தொற்றுக்கு எதிராக போராட்டத்தில் மருத்துவர்களின் பங்கு அளப்பறியது. கவச உடை அணிந்து 10 மணி நேரங்களுக்கு மேலாக வியர்வையுடன், இயற்கை உபாதைகளுடன்…

கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு இந்தாண்டு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு எதிராக போராட்டத்தில் மருத்துவர்களின் பங்கு அளப்பறியது. கவச உடை அணிந்து 10 மணி நேரங்களுக்கு மேலாக வியர்வையுடன், இயற்கை உபாதைகளுடன் போராடி கொரோனாவின் 2 அலைகளையும் எதிர்கொண்டுள்ளனர். 

கொரோனா 2ஆவது அலை காரணமாக இந்தியாவில் 798 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளதாகவும்,  இதில் அதிகபட்சமாக டெல்லியில்  128 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். 

இந்த  நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த ஆண்டு மருத்துவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதே, உயிரிழந்த மருத்துவர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி” என்று தெரிவித்துள்ளார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.