டிடிஎஃப் வாசனுக்கு 3வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு மூன்றாவது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து, காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே பைக் வீலிங் செய்த போது விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் கைது…

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு மூன்றாவது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து, காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் அருகே பைக் வீலிங் செய்த போது விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரது ஜாமீன் மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 3-ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், விளம்பரத்துக்காக இதுபோன்று செயலில் ஈடுபடும் வாசனின் யூடியூப் சேனலை மூடிவிடவேண்டும். அவரது பைக்கை எரித்துவிடலாம் என்று கருத்து தெரிவித்தார்.

மேலும், காயமடைந்த வாசனுக்கு சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கும்படி கூறிய நீதிபதி, டிடிஎஃப் வாசனால் 45 லட்சம் சிறார்கள் தவறான வழிக்குச் செல்கிறார்கள். யூடியூப் சேனலில் வாசனைப் பார்க்கும் சிறார்கள் அதிவேகத்தில் பைக் ஓட்டுகிறார்கள். இதனால் விபத்துகள் நேரிடுகின்றன என்றும் தெரிவித்தார். மேலும் அவரது ஜாமீன் மனுவை நீதிபதி கார்த்திகேயன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் அவரது காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இனியா கருணாகரன் முன்னிலையில் இன்று டிடிஎஃப் வாசன் வழக்கு விசாரணைக்கு வந்தது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த விசாரணையில், மூன்றாவது முறையாக 14 நாட்கள் வழங்கி வருகின்ற 30-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு
நீதியரசர் இனியா கருணாகரன் உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.