தொற்று குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்?

தமிழ்நாட்டில் தொற்று குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கானது, நாளை காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை…

தமிழ்நாட்டில் தொற்று குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கானது, நாளை காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, தலைமைச் செயலகத்தில், மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில், தொற்று அதிகம் உள்ள 8 மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்க வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தொற்று குறைந்த மாவட்டங்களில் பெரிய வணிக நிறுவனங்கள், மால்கள் திறக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேபோல், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் வணிகர்களுக்கு கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கவும் முதலமைச்சருடனான ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.