தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு சதவிகிதம் ஐந்துக்கும் கீழ் குறைந்தது.

தமிழ்நாட்டில் இரண்டாம் அலையின் தினசரி கொரோனா பாதிப்பு சதவிகிதம் ஐந்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், புதிதாக 8 ஆயிரத்து 183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

தமிழ்நாட்டில் இரண்டாம் அலையின் தினசரி கொரோனா பாதிப்பு சதவிகிதம் ஐந்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், புதிதாக 8 ஆயிரத்து 183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 468 ஆக குறைந்துள்ளது. சென்னையில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 2 ஆயிரத்து 262 ஆக குறைந்துள்ளது. கோவை மாவட்டத்தில், புதிதாக ஆயிரத்து 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, தொற்றில் இருந்து குணமடைந்து, ஒரே நாளில் 18 ஆயிரத்து 232 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 180 பேர் உயிரிழந்ததாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.