டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: 3 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும்…

லக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நேற்று தொடங்குவதாக இருந்தது. இதற்காக வீரர்கள் தயாராக இருந்தனர்.

முதல் முறையாக ஐசிசி நடத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் இதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், சவுத்தாம்டனில் நேற்று காலை முதலே மழை பெய்து வந்ததால், போட்டி தொடங்குவதில் தாமதமானது. போட்டிக்கான டாஸ் போடப்படாத நிலையில், மழை தொடர்ந்து பெய்த தால், முதல் பாதி ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மழை தொடர்ந்து பெய்துவந்ததால், முழு நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் சுப்மன் கில்லும் களமிறங்கினர். நிதானமாக ஆடிய இவர்களில் ரோகித் சர்மா 34 ரன்களிலும் சுப்மன் கில் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரோகித் சர்மாவை ஜேமீசனும் சுப்மன் கில் விக்கெட்டை நீல் வாக்னரும் தூக்கினர்.

அடுத்து, நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட புஜாரா, வெறும் 8 ரன்கள் எடுத்த நிலையில், போல்ட் வேகத்தில் எல்பிடபிள்யூ ஆகி ஏமாற்றமளித்தார். இதையடுத்து கேப்டன் விராத் கோலியும் துணை கேப்டன் ரஹானேவும் பொறுப்போடு ஆட்டத்தைத் தொடங்கினர்.

64 .4 ஓவரில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது. விராத் கோலி 44 ரன்களுடனும் ரஹானே 29 ரன்களுடனும் களத்தில் எடுத்துள்ளனர். மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடங்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.