புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும் வகையிலும், பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 4 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி அளிக்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். அதன்படி, முதல் தவணையாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது நடைமுறைக்கு வந்துள்ள 2 லட்சத்து 14 ஆயிரத்து 950 புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 42 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவில், நிவாரண நிதி உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.







