விரைவில் 10 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள்: அமைச்சர்!

தமிழகத்தில் விரைவில் 10 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் அருகே தனியார் மருத்துவமனையில் 120 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ கொரோனா சிகிச்சைப் பிரிவை…

தமிழகத்தில் விரைவில் 10 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் அருகே தனியார் மருத்துவமனையில் 120 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ கொரோனா சிகிச்சைப் பிரிவை துவக்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியம் , பின்னர், அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் 100 கொரோனா சித்த வைத்திய சாலைகளை திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் மேலும் 2 ஆயிரம் மருத்துவர்கள், 6 ஆயிரம் செவிலியர்கள் மற்றும் 2 ஆயிரம் தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்ட 10 ஆயிரம் பேர் நியமிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.