முக்கியச் செய்திகள் தமிழகம்

கி.ரா மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான எழுத்தாளர் கி. ராஜநாராயணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர், தலைசிறந்த கதைசொல்லி என போற்றப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (99) வயது முதிர்வு காரணமாக புதுச்சேரியில் இன்று காலமானார்.

தமிழ் இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளராக பார்க்கப்படும் கி.ராவின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், “கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழ்ந்து தேம்புகிறார். கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்!
எழுத்தாளர் கி.ராவின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும்” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக எதிர்கட்சி தலைவர் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள இரங்கல் குறிப்பில், “சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் (99) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்,அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி,“எழுத்தாளர் கி.ரா.வின் மறைவு இற்திய இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு” என கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் நடிகர் கமல்ஹாசன்,

நடிகர் சிவகுமார், “எனக்கும் எழுத்தாளர் கி.ராவுக்கும் 35 வருட காலமாக உறவு உண்டு. அந்த மகத்தான மனிதர் கரிசல் மண்ணை பற்றி எழுதிய கோபல்ல கிராமம், அந்த கிராமத்து மக்கள், கரிசல்காட்ட கடுதாசி, வட்டார வழக்கு சொல்லகராதி போன்ற அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பார்”

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மறைந்த எழுத்தாளர் கி.ராவுக்கு எதிர்காலத்தில் நினைவு மண்டபம் எழுப்பவேண்டும்” என்ற கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் கி.ரா குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எழுத்தாளரும் நாடாளுமன்ற எம்பியுமா சு. வெங்கடேசன், டிடிவி தினகரன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் எழுத்தாளர் கி.ரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement:

Related posts

மழைநீரில் மூழ்கிய மக்காச்சோளம்; ரூ.1 கோடி நஷ்டத்தால் விவசாயிகள் வேதனை!

Jayapriya

தமிழை ஒன்றிய அரசின் ஆட்சிமொழியாக்க பாடுபடுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Ezhilarasan

திமுகவை எதிர்த்தே எங்கள் பிரச்சாரம்:டிடிவி

Jeba Arul Robinson