கோவையில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
கோவை மாநகராட்சி பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி போடும் பணி துவங்கியது. கடந்த இரண்டாம் தேதிக்கு பின்னர் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் பலரும் அவதிப்பட்டனர். இந்நிலையில் நேற்று முதல் தடுப்பூசி போடும் பணி மாநகரம், ஊரக பகுதிகளில் துவங்கியது. இதன் காரணமாக கோவை சீரநாயக்கன் பாளையம், பீளமேடு, வடவள்ளி ஆகிய பகுதிகளில் இரவிலிருந்தே பொதுமக்கள் தடுப்பூசி போட காத்திருந்தன.
அதேபோல் கோவையின் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் நிலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நஞ்சுண்டாபுரம், புலியகுளம், இராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் நீண்ட வரிசையில் தடுப்பூசி போட மக்கள் காத்திருந்தனர்.







